Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 06, சனிக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சிஹாரா லத்தீப்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட ஆயித்தியமலை பகுதியில் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியாவின் பணிப்புரைக்கமைய பொலிஸார் ஏற்பாடு செய்த நடமாடும் சேவை நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.பண்டாரவின் ஏற்பாட்டில் மணிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம். கருணாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த நடமாடும் சேவையில் வைத்திய சேவை, விவசாயம், வன ஜீவராசிகள், சமுர்த்தி உட்பட பல அரச சேவைகளும் பொலிஸ் திணைக்களத்தின் சகல சேவைகளும் இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இதன் போது ஆயித்தியமலை மக்களுக்கு இலவசமாக தென்னங் கன்றுகள் அன்பளிப்பு செய்யப்பட்டதுடன் வறிய மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
05 Mar 2021
05 Mar 2021