2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

ஒந்தாச்சிமடத்தில் கடற்றொழில் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு கொழும்பில் விசேட பயிற்சி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்.)

மட்டக்களப்பு ஒந்தாச்சிமடத்தில் கடல் தொழில் பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளை நிறைவு செய்து கொழும்பு துறைமுகத்திற்கு விசேட பயிற்சிகளுக்காகச் செல்லவுள்ளவர்களுக்கான விசேட நிகழ்வு ஒன்று நேற்று மாலை நடைபெற்றது.

பயிற்சி நிலையத்தின் தொழில்நுட்ப பயிற்சி இணைப்பு பணிப்பாளர் நரேந்திரன், மட்டக்களப்பு தொழில் நுட்பக்கல்லூரி அதிபர் எம்.குணரெட்ணம்,  பயிற்சி நிலையத்தின் போதானாசிரியர் கண்ணன் ஜீ.ரி.இசட் பணிப்பாளர், யு எஸ்.எயிட்  பணிப்பாளர், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி நிலையத்தில் இயந்திரப் படகுகள், ஐஸ் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இதில் பயிற்சி பெற்ற 30 மாணவர்கள் கொழும்பில் விசேட பயிற்சி பெறவுள்ளனர்.

இங்கு உரையாற்றிய தொழில்நுட்ப பயிற்சி இணைப்பு பணிப்பாளர் நரேந்திரன், மட்டக்களப்பு மாவட்டத்தில தொழில் நுட்பக் கல்வியானது வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் எந்தத்துறையில் மாணவர்களுக்குத் தேவையுள்ளது என அறிந்து பயிற்சியளிக்கப்படுவதில்லை. அது மாத்திரமன்றி கடந்த கால சுனாமியின் போது அரச சார்பற்ற நிறுவனங்கள் பல பயிற்சிகளை வழங்கியிருந்தன. அதனால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

ஒந்தாச்சிமடம் கடல் கரையில் அமைந்துள்ள இந்தப் பயிற்சி நிலையமானது கடல் தொழில் சார்ந்து பயிற்சிகளை வளங்கி வருகிறது. இதனால் பல்வேறுபட்ட பிரயோசனங்கள் ஏற்படும். இதில் இளைஞர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

தொழில்நுட்ப பயிற்சி என்பது, பயிற்சி முடித்த ஒருவர் தானாகவே அந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கான கல்வியை வழங்குவதாகும். அதனால் அந்தத் துறையில் வல்லுனர்களை உருவாக்கக் கூடியது என்றார்.

இங்கு பேசிய  மட்டக்களப்பு தொழில் நுட்பக்கல்லூரி அதிபர் எம்.குணரெட்ணம்,  தொழில்நுட்பப் பயிற்சி பெறும் மாணவர்கள், தொடர்ந்நது பயிற்சிகளை முன்னெடுக்க வேண்டும். தொழில்நுட்பத் துறையை அபிவிருத்தி செய்யவேண்டும். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் புதிய சாதனைகளை செய்ய வேண்டும், பயிற்சிகளை இடைநடுவில் கைவிடக்கூடாது, உங்களுக்கு எத்துறையில் ஆர்வமிருக்கிறதோ அத்துறையில் கவனத்தைச் செலுத்துங்கள். பயிற்சி பெறுங்கள் என்றார்.

இந்த நிகழ்வில் பயிற்சியை முடித்து கொழும்பு செல்லவுள்ள மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஒந்தாச்சிமடம் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் உபகரணங்களும் வழங்கப்பட்டன.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .