2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

மீளக் குடியேறிய குடும்பங்களுக்கு மரவாயு அடுப்புக்கள்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலைப் பிரதேசத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து  மீளக்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு எகெட் கரிட்டாஸ் நிறுவனம் அக்கிராமத்தில் மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு நவீனதொழில் நுட்பத்துடன் கூடியதான சிக்கன மர வாயு அடுப்புக்களை நேற்று வழங்கியது. ஆயித்தியமலை சதா சகாய மாதா ஆலயத்தின் முன்றலில் இவ் மர அடுப்புக்கள் வழங்கும் வைபவம் நடைபெற்றது.

எகெட் திட்ட இணைப்பாளர் எஸ்.ஓ.ஜெயானந்தம், எகெட் நிறுவனத்தின் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் கந்தசாமி மற்றும் ஆயித்தியமலை விவசாய போதனாசிரியர் கோர்சலரூபன் உட்பட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு சிக்கன மர வாயு அடுப்புக்களை வழங்கி வைத்தனர்.

இங்கு மீள் குடியேறியுள்ள 45குடும்பங்களுக்கும்  இதன் போது இவ் அடுப்புக்கள் வழங்கப்பட்டதாகவும் இதன் ஒவ்வொரு அடுப்பும் 3500ரூபா பெறுமதியானதெனவும் எகெட் நிறுவனத்தின் ஊடக இணைப்பாளர் மைக்கல் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .