Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)
சுனாமி மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டிய பாதைகளை காட்டும் அறிவுறுத்தலடங்கிய விளம்பர பலகைகள் அமைக்கும் நடவடிக்கைள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கடற்கரையை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனர்த்த நேரகால முன்னெச்சரிக்கை வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் இவ்விளம்பர பலகைகள் அமைக்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவின் புதிய காத்தான்குடியிலுள்ள அனர்த்தவலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கடற்கரையை அண்மித்த மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இவ்விளம்பர பலகைகளை நாட்டும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
புதிய காத்தான்குடி 167சி இலக்க கிராம உத்தியோகத்தர் அஸீஸ் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனர்த்த நேரகால முன்னெச்சரிக்கை வேலைத்திட்டத்தின் காத்தான்கடி இணைப்பாளர் இர்சாத் மற்றும் அனர்த்த முகாமைத்து கிராமிய மட்டக்குழுவின் உறுப்பினர்களும் இணைந்து இவ்விளம்பர பலகைகளை நாட்டி வைத்தனர்.
புதிய காத்தான்குடியிலுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் 21 இவ்வாறான விளம்பர பலகைகள் நாட்டப்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்கடி பிரிவுத்தலைவர் அப்துல்லா தெரிவித்தார்.

7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago