2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

வாகரையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு வார நிகழ்வுகள்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)
 
சுகாதார அமைச்சினால் தேசிய ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டெங்கு நோய் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வாகரைப் பிரசேத்தில் 233ஆவது இராணுவ படைப் பிரிவின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை வட்டுவான் கலைமகள் வித்தியாலயத்தில் நிகழ்வுகள் நடைபெற்றதன.
 
இந்நிகழ்வில் அப்பிரதேச சிவில் - இராணுவ இணைப்பதிகாரி மேஜர் எச்.பி.டபிள்யு.பிரசாத் பெரேரா மற்றும் வித்தியாலய அதிபர் சீ.ஜெயராஜா உட்பட பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
அப் பிரதேசத்திலுள்ள 12 பாடசாலைகளில் சிரமதானம் மற்றும் டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வு கருத்துரைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் டெங்கு நோய் ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .