2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சிய பதிவு மட்டக்களப்பில் ஆரம்பம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமாகி தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இன்று காலை சரியாக 9மணிக்கு இவ் அமர்வு ஆரம்பமாகியது.

ஆணைக்குழுவில் எச்.பி.பரணகம, கரு. ஹகபத்த, ரொகான், எச்.எம்.எம்.ஜே,பள்ளிஹக்க, மனோகரி ராமநாதன், சி.சண்முகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். இவ் ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி.சில்வா மற்றும் அதன் உறுப்பினரான எம்.டி.எம்.வாபிக் ஆகிய இருவரும் இன்றைய அமர்வில் சமூகமளிக்கவில்லை.

முதலாவது சாட்சியத்தை மட்டக்களப்பு சமாதான அமைப்பின் தலைவர் அருட்தந்தை மில்லர் வழங்கினார்.

தமது சாட்சியங்களை வழங்குவதற்காக பெருமளவிலான தமிழ் மக்கள் இங்கு வருகைதந்து காத்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .