2025 ஜூலை 12, சனிக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக மாணவரிடையே விழிப்புணர்வு செயலமர்வு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக மாணவர்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் ஒழுங்குசெய்யப்பட்ட செயலமர்வு நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் சேர் ராஷிக் பரீட் மண்டபத்தில் நடைபெற்றது.

மனித உரிமை ஆணைக்குழு, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் நிலையம், கிழக்கு மாகாண சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை போன்றன இந்த செயலமர்வை கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன.

வளவாளர்களாக நன்னடத்தை உத்தியோகஸ்தர்களான எம்.என்.முஹம்மட் றபாஸ், எம்.சீ.எம்.இஸ்ஹக், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மாவட்ட இணைப்பாளர் யூ.எல்.அஸார்டீன் போன்றோர் விரிவுரை நிகழ்த்தியதுடன் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .