2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் மூன்று புதிய தபாலக கட்டிடங்கள் இன்று திறப்பு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 15 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மூன்று புதிய தபாலக கட்டிடங்கள் இன்று வெள்ளிக்கிழமை தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவினால் திறந்து வைக்கப்பட்டன.

கல்குடா மற்றும் பெரிய போரதீவு, மண்டூர் ஆகிய பிரதேசங்களில் சுமார் 27 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபாலக கட்டிடங்களை அமைச்சர் ஜீவன் குமாரதுங்க திறந்து வைத்தார்.

மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனின் அழைப்பை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சென்ற அமைச்சர் ஜீவன் மட்டக்களப்பு பிரதம தபால் அலுவலகத்துக்கு சென்று அங்குள்ள ஊழியர்களை சந்தித்ததுடன் மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினரையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் போது பிரதியமைச்சர் முரளிதரன் மற்றும் கிழக்குமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் புவனசுந்தரம் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .