2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

கல்லடியில் முதியோர் கௌரவிப்பு வைபவம்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, கல்லடி, வேலூர் சமுர்த்தி தாய் சங்கம் ஏற்பாடு செய்த முதியவர்களை கௌரவிக்கும் வைபவம் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. சர்வதேச முதியோர் வாரத்தையொட்டி நடத்தப்பட்ட இவ்வைபவம் சங்கத்தின் தலைவி எம்.தங்கேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் இப்பிரிவிலுள்ள பத்து குடும்பங்களிலிருந்து பத்து முதியவர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன் விஷேடமாக இப்பிரிவில் வசித்து வரும் 106 வயதுடைய கே.அண்ணம்மா என்பவரையும் இதன் போது பொண்ணாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்ததாக கல்லடி வேலூர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .