2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

தோணி கட்ட இடமில்லாத பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 18 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

வாழைச்சேனை, நாசீவன்தீவு மீனவர்களின் தோணி கட்டுவதற்கு இடம் இல்லாத பிரச்சினைக்கு தீர்வுகானும் முகமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று காலை 10 மணிக்கு நேரில் சென்று மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

அத்துடன் பொருத்தமான புதிய இடத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வாழைச்சேனை பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரனை முதலமைச்சர்  பணித்தார்.

இச்சந்திப்பில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எஸ்.உதய ஜீவதாஸும் கலந்து கொண்டார்


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .