2020 நவம்பர் 28, சனிக்கிழமை

தாழங்குடா கல்வியல் கல்லூரி வளாகத்தினுள் மாணவர்கள் கையடக்க தொலைபேசி பாவிப்பது தடை

Super User   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, தாழங்குடா கல்வியல் கல்லூரி வளாகத்தினுள் ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் கையடக்க தொலைபேசி பாவிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது என கல்லூரியின் பீடாதிபதி எம்.பாக்கியராசா தெரிவித்தார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த நடைமுறை கல்லூரியினுள் கொண்டு வரப்பட்டிருந்த போதிலும் தற்போது இந்நடைமுறை கண்டிப்பாக அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமூகச் சீரழிவுகளை தடுக்கும் பொருட்டே இந்நடைமுறை கொண்டு வரப்பட்டது. எக்காரணம் கொண்டும் ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசியினை கல்லூரி வளாகத்தினுள் பாவிக்க அனுமதிப்பதில்லை என பீடாதிபதி கூறினார்.

மாணவர்கள் தமது குடும்ப உறவினர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமாயின் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள பொது தொலைபேசியினை பயன் படுத்த முடியுமெனவும் பீடாதிபதி எம்.பாக்கியராசா தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--