Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு மாவட்ட தொண்டர்களுக்குரிய அடிப்படை தொண்டர் பயிற்சிநெறிகள் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் நடத்தப்படவுள்ளதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டு. மாவட்டக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 22ஆம் 23ஆம் 24ஆம் திகதிகளில் ஆரையம்பதி பிரிவு தொண்டர்களுக்கும் 29ஆம் 30ஆம் 31ஆம் திகதிகளில் பட்டிப்பளை பிரிவுத் தொண்டர்களுக்கும் எதிர்வரும் நவம்பர் மாதம் 05ஆம் 06ஆம் 07ஆம் திகதிகளில் போரதீவுப்பற்றுப் பிரிவுத்தொண்டர்களுக்கும் 19ஆம் 20ஆம் 21ஆம் திகதிகளில் வாகரைப் பிரிவுத் தொண்டர்களுக்கும், டிசம்பர் மாதம் 11ஆம் 12ஆம் 13ஆம் திகதிகளில் கிரான் பிரிவுத்தொண்டர்களுக்கும் பயிற்சிநெறிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு பிரிவுகளிலும் தலா 30 பேர் கொண்ட தொண்டர் குழுவினரே இப்பயிற்சியில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இதன் மூலம் தொண்டர்கள் எவ்வாறு சமூக ரீதியில் சேவை செய்தல், தலைமை தாங்கும் திறன், சங்கத்தின் கொள்கைகள் என்பன பற்றியும் கற்பிக்கப்படவுள்ளதோடு பயிற்சிநெறி முடிவில் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
12 minute ago
19 minute ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
14 Nov 2025
14 Nov 2025