2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

மாங்காடு ஸ்ரீ கயம்புலிங்க மகா விஸ்ணு தேவஸ்தானத்தில் வருடா பிஷேக நிகழ்வு

Super User   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட மாங்காடு ஸ்ரீ சுயம்புலிங்க மகா விஸ்ணு தேவஸ்தானத்தின் வருடா பிஷேக நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக இடம்பெற்றன.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை மாங்காடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசைகள் இடம்பெற்று அங்கிருந்து பாற்குட பவனி ஆரம்பமானது.

இந்த பாற்குட பவனியில் சிறியவர்கள், பெரியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் விசேட யாக பூசை இடம்பெற்றதுடன் சங்காபிஷேக நிகழ்வுடன்விசேட பூசைகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .