2020 நவம்பர் 28, சனிக்கிழமை

செட்டிபாளையத்திலிருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேறினர்

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்வதனகுமார்)

கடந்த 20 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில்  அமைக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படையினரின் சிறப்பு முகாமில் இருந்து அதிரடிப் படையினர் வெளியேறிச் சென்றுள்ளனர்.

சுமார் 25 பொதுமக்களின் வீடுகள் கொண்ட காணிகளையும் நெசவு நிலையத்துக்குரிய கட்டிடம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்துக்குரிய கட்டிடங்களில் 1990ஆம் ஆண்டுகளில் விசேட அதிரடிப்படையினர் முகாம் அமைத்திருந்தனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து விசேட அதிரடிப் படையினர் இப்பகுதியில் இருந்து விலகிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--