2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண சிறுவர் தின விழா

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன், கே.எஸ்.வதனகுமார்)

கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிறுவர் தினம் வைபவம்  சிறுவர் உலகு ஒளி பெற அனைவரும் சக்தி கொடுங்கள்' என்ற தொனிப் பொருளில் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகரில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரமவும் கௌரவ அதிதியாக முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், விஷேட அதிதிகளாக மாகாண  அமைச்சர்  எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர்களான பி.பிரசாந்தன், கே.எல்.எம்.பரீட் மற்றும் மட்டு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தின் முன்று மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்ட  இந்நிகழ்வில் சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகள் அதிதிகளால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .