Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நேற்று மாகாண சிறுவர் அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பில் நடத்தப்பட்ட உலக சிறுவர் விழாவில் முற்றாகப் புறக்கணிப்புச்செய்யப்பட்டுள்ளனர்.
மாகாண சிறுவர் விவகார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் மட்டக்களப்பு தன்னாமுனையில் நேற்று நடத்தப்பட்ட இவ்விழாவில் மாகாண ஆளுநர், முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், ஆளும் தரப்பு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இவ்விழா தொடர்பாக மாகாணசபையினால் அச்சிடப்பட்ட அழைப்பிதழிலி;ல் கிழக்கு மாகாணசபையின் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சகலரது பெயர்களும் அச்சிடப்பட்டிருந்தன.
ஆனால் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான யு.எல்.எம்.முபீன் மற்றும்
எம்.இஸ்மாயில் ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
அதேபோல் ஈ.பி.ஆர்.எல்.எப் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான அ.சசிதரன், எம்.மாசிலாமணி ஆகிய உறுப்பினர்களும் அழைப்பிதழிலில் புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.
nilu Thursday, 28 October 2010 06:22 PM
ETALLAM ORU NEWSW> THARAMATTATHU
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
14 Jul 2025
14 Jul 2025