Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சிஹாறா லத்தீப்)
இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாளை கிழக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பல இளைஞர் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
நாளை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும, முற்பகல் 9.00 மணிக்கு அக்கரைப்பற்று தொழிநுட்பக்கல்லூரியில் நடைபெறும் வைபவத்தில் கலந்துகொண்டு தொழில் பயிற்சிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைப்பார்.
இதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் அவர், மட்டக்களப்பு மகாஜனாக்கல்லூரி கலையரங்கில் நடைபெறும் தேசிய இளைஞர் கழக சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட சம்மேளன விசேட ஒன்றுகூடலிலும் அதனைத் தொடர்ந்து பிற்பகல் 4 மணிக்கு காத்தான்குடிப்பகுதியில் தொழில்பயிற்சி நிலைய புதிய கட்டிடத் தொகுதியையும் வைபக ரீதியாக திறந்து வைக்கவுள்ளார்.
இத்தொழிற்பயிற்சி நிலையம் சுமார் 21ஃ2 கோடி ரூபா செலவில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் நிறுவப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவுத்தகவல் தெரிவிக்கின்றது.
இந்நிகழ்வுகளில் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், இளைஞர் விவகார பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உட்பட பல அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
2 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago