2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

முன் பள்ளி ஆசிரியர்களின் ஆக்கத்திறன் கண் காட்சி

Super User   / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி )

மட்டக்களப்பு மாவட்ட முன் பள்ளி ஆசிரியர்களின் ஆக்கத்திறன் கண் காட்சி இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றும் நாளையும் நடைபெறும் இக்கண்காட்சியினை மட்டக்களப்பு மாவட்ட முன் பள்ளி ஆசிரியர்களின் அபிவிருத்தி வலயமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன், கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகளின் பணியகத் தலைவர் நடராசா உட்பட அதிகாரிகள் மற்றும் முன் பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டு இக்கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தனர்.

இக்கண்காட்சியில் மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய மூன்று வலயங்களிலுள்ள 500 முன்பள்ளிகளிலிருந்து 1500ஆசிரியைகள் பங்கு பற்றியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .