2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

வாகரையில் ஆங்கில மொழி செயல்முனைப்பு கருத்தரங்கு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட கல்வித்திட்டத்திற்கு அமைய வாழ்க்கைத் திறனொன்றாக ஆங்கில மொழி செயல் முனைப்பு கருத்தரங்கு நிகழ்வு ஒன்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாந் தலமையில் வாகரை மாகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண ஆளுனர் அட்மிரல்  மொகான்  விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி கல்விப் பிரிவுக்கான செயலாளர்  ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர். இச் செயலமவர்வானது கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் அதிபர்களுக்காவே இடம்பெற்றது. 

மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் பேசப் பழக்குவதற்கான வழிகாட்டி நூல்கலும் கருத்தரங்கில் பங்குபற்றியவர்களுக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சாவினால் 2009ஆம் ஆண்டு அலரி மாளிகையில் நடைபெற்ற கல்வியாலருக்கான கூட்டத்தில் அனைத்து மாணவர்களும்  ஆலங்கிலத்தில்  பேசுவதற்கு போதிய திறனை வளர்க்க வேண்டும் என்றார்.

இதற்கமைய அவரது ஆலோசனைத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் ஆங்கிலக்கல்வியை மாணவர்களிடையை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  அதன் ஒரு கட்டமாக வாகரை மாகாவித்தியாலயத்தில் கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுக்கான இது தொடர்பான விளக்கமளிக்கபட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .