2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

அங்கவீனர், விஷேட தேவையுள்ள மாணவ நிலையங்களுக்கு தொலைக்காட்சிப்பெட்டிகள்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 01 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி )

அங்கவீனர் நிலையங்கள் மற்றும் விஷேட தேவையுள்ள மாணவர்கள் ஆகியோருக்கு தொலைக்காட்சிப்பெட்டிகள்,; வானொலிப்பெட்டிகளை  மட்டக்களப்பிலுள்ள சேவாலங்கா மன்றம்  வழங்கிவருகின்றனர்.


இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடியிலுள்ள கிழக்கிலங்கை சாஹிறா வலது குறைந்தோர் நிலையத்திற்கு தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் வானொலிப்பெட்டி என்பன வழங்கப்பட்டது.


இவைகளை வழங்கும் வைபவம் இன்று காத்தான்குடியிலுள்ள வலது குறைந்தோர் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் சேவாலங்கா மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஜி.நாகேஸ்வரன், காத்தான்குடி இணைப்பாளர் பாஹீம் உட்பட அங்கவீனர் நிலையத்தின் உபதலைவர் ஆதம்வெல்வை மௌலவி மற்றும் நிருவாகிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--