Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 03 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்தில் சேதமாக்கப்பட்ட வலையிறவு - வவுணதீவு பாலம் போர் ஓய்ந்து 3 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இது வரை புனரமைக்கப்படாமை குறித்து விவசாயிகள் உட்பட பொது மக்கள் கவலையடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர பிரதேசமான எழுவான்கரையையும் வயல் சார்ந்த பிரதேசமான படுவான்கரையையும் இணைக்கும் இப்பாலம் இம்மாவட்டத்தின் விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்கான முக்கிய போக்குவரத்து பாதையாக பலராலும் கருதப்படுகின்றது.
யுத்த காலத்தில் பல தடவைகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டு அவ் வழியாக வழமையான போக்குவரத்து சேவைகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக இப்பாலம் வழியான வாகனப் போக்குவரத்து என்பது ஆபத்து நிறைந்த பயணமாகவே பலராலும் கருதப்படுவதால் இப் பாலம் உரிய முறையில் நிரந்தரமான வகையில் புனரமைக்கப்பட்ட வேண்டும்.
அதற்கு பதிலாக புதிய பாலம் அமைப்பதற்கான வேலைகள் விரைவாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என பலரும் சம்பந்தப்பட்டவர்களைக் கோருகின்றார்கள்.
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025