2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

இவ்வாண்டிற்கான மாணவர் படையணிக்கான முன்னோடி படநெறி இன்று ஆரம்பம்

Kogilavani   / 2010 நவம்பர் 03 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
இலங்கை அரசாங்கம் தேசிய மட்டத்தில் தேசிய மாணவர் படையணியினை உருவாக்கும் நோக்குடனான  பத்து நாள் வதிவிடப் பயிற்சிப் பாசறை இன்று, புதன் கிழமை முதல் எதிர் வரும் 2010.11.12 ஆம் திகதி வரை ரன்தெனிகலையில் அமைந்துள்ள ரன்தெம்ப தேசிய மாணவார் படையின் தேசிய பயிற்சிப் பாடசாலையில் நடைபெறவுள்ளது.

அரசாங்கத்தினால் இலவசமாக தேசிய பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப் படும்  இவ்வதிவிடப் பயிற்சியில் இலங்கையின் பல பாடசாலைகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அம்பாறை,  மட்டக்களப்பு மாவட்டங்களின் 45 பாடசாலைகளில் இருந்து 45 மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று காலையில் அம்பாறை நகரில் ஒன்று கூடி புறப்பயுட்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .