Menaka Mookandi / 2010 நவம்பர் 03 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று மாலை பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.ம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இப்பிரதேசத்தில் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்ககைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் எதிர்வரும் ஆண்டு முன்னுரிமையளிக்கப்படவேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டன.
ஏறாவூர் 4ஆம் 5ஆம் பிரிவுகளில் மூடப்பட்டிருந்த உள்வீதிகள் அண்மையில் பொலிஸாரால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்ட போதிலும் பாதுகாப்பு அரண்கள் அமைக்கபட்ட மண் மேடுகள் இதுவரை அகற்றப்படாமையினால் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டியபோது இது தொடர்பில் ஓரிரு தினங்களில் நடவடிக்கை எடுப்பதாக பிரதேசசபை தவிசாளர் அப்துல் கபூர் பதிலளித்தார்.
தற்போது பருவமழை காலம் ஆரம்பித்துள்ளதால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளுக்குரிய வேலைத்திட்டங்களில் பூர்த்தி செய்யப்படாத வேலைத்திட்டங்களை இம்மாதத்திற்குள் பூத்தி செய்யுமாறு பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.ம்.ஹிஸ்புல்லாஹ் பணித்துள்ளார்.

19 minute ago
21 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago
48 minute ago