A.P.Mathan / 2010 நவம்பர் 03 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆதவன்)
அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் ஏறாவூர் கிளை காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா வீதியிலுள்ள இக்காரியாலயம் இன்று மதியம் 1.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினாலேயே தீக்கிரையாக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்ச தமிழ்மிரரிடம் கூறுகையில்...
இதுவொரு அரசியல் பழிவாங்கும் சம்பவமாகும். இத்தாக்குதலை யார் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இச்சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் யாரென இதுவரை தெரியவரவில்லை. பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025