2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

பாதை நடுவே மின்கம்பம்; பொதுமக்கள் விசனம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 04 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

புதிய காத்தான்குடி தெற்கு  பகுதியிலுள்ள சிறிய வீதியொன்றின் நடுவேயுள்ள மின்கம்பமொன்று மிக நீண்டகாலமாக போக்குவரத்திற்கு இடையூறாகவிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த வீதியில் தெருவோர மின்விளக்குகள் இல்லாத காரணத்தினால், இரவுவேளைகளில் பலர் இந்த மின் கம்பத்தில் முட்டிமோதி விழுவதாகவும் இந்த மின்கம்பம் வளைவில் இருப்பதனால் முச்சக்கரவண்டி போன்ற சிறிய வாகனங்கள் கூட செல்லமுடியாத நிலை காணப்படுவதாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மின்கம்பத்தை வீதியோரத்திற்கு மாற்றித் தரும்படி   அரசியல்வாதிகள் பலரிடமும் பலமுறை முறையிட்டும் இதுவரையில் எந்தவொரு  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அம்மக்கள் குறை கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .