2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

மட்டு–கொழும்பு ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

Super User   / 2010 நவம்பர் 09 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பிற்கும் கொழும்பு கோட்டைக்கும்  இடையிலான புகையிரத சேவை இன்று மாலை வழமைக்கு திரும்பியுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிககாரியொருவர் தெரிவித்தார்.

இன்று காலை 10.15 மணிக்கு வழமை போன்று திருகோணமலைக்கான சேவை இடம்பெற்றது.

இதேபோன்று பிற்பகல் 5.45 மணிக்கு கொழும்பிற்கான சேவையும், இரவு 8.15 மணிக்கு கொழும்பு கடுகதி சேவையும் வழமைபோன்று இடம்பெறுமென அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ரயில் தடம் புரண்டதால் நேற்று மாலை கொழும்பு கோட்டைக்கு மட்டக்களப்பிற்குமிடையிலான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--