2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

'வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தக்கூடாது'

Kogilavani   / 2010 நவம்பர் 14 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசிகள் பாவிப்பதை நிறுத்திக்கொள்ள  வேணடுமென மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் கோரியுள்ளார்.
 
மட்டக்களப்பு  குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நேற்று  பாடசாலை அதிபர் க.ஞானேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'வகுப்பறைகளில் கையடக்கத் தொலைபேசிகளை ஆசிரியர்கள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாணவர்கள் கணினிகளை கற்றல் நடவடிக்கைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தவேண்டும' என மேலும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி கே.பிறேம்குமார், ஏறாவூர் மக்கள் வங்கி கிளை முகாமையாளர் எம்.எஸ்.அப்துல் கபூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, க.பொ.த.உயர்தர இந்து நாகரிகம் பாடத்தில் பாடசாலை மட்டத்தில்  கூடிய புள்ளி பெற்ற மாணவி  கோபாலசிங்கம் சாய்தர்ஷினிக்கு பதில் உபவேந்தரால் சான்றிதழ் வழங்கப்பட்டது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .