Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 16 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி )
மட்டக்களப்பு மத்திய வலயக் கல்வி அலுவலகத்தினால், அதன் கல்வி வலயப் பிரிவுக்குட்பட்ட விஷேட தேவையுள்ள மாணவர்களையும் ஏனைய மாணவர்களையும் இணைத்து கலாசார நிகழ்வுகளை நடத்தும் வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடியிலுள்ள சாஹிரா வலது குறைந்த பாடசாலையைச் சேர்ந்த விஷேட தேவையுள்ள மாணவர்களும் காத்தான்குடி மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஏனைய மாணவர்களும் பங்குகொண்ட கலாசார நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடி சாஹிரா வலதுகுறைந்தோர் பாடசாலையில் நடைபெற்றது.
இதில் இரண்டு பாடசாலைகளையும் சேர்ந்த 55 மாணவர்கள் பங்குபற்றினர்.
இதில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் மற்றும் ஓவியம் வரைதல், ஆக்கத்திறனை மேற்கொள்ளுதல், விளையாட்டுகளில் ஈடுபடுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. மட்டக்களப்பு மத்திய வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.நசீறாவின் நெறிப்படுத்தலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
அத்துடன், விஷேட தேவையுள்ள மாணவர்களுக்கு வழங்கவென பிரதி வலயக் கல்விப் பணிப்பாளரினால் விளையாட்டு உபகரணங்கள் வலது குறைந்த பாடசாலையின் அதிபரிடத்தில் வழங்கப்பட்டது.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago