Menaka Mookandi / 2010 நவம்பர் 17 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுஷன்)
மட்டக்களப்பு, படுவான்கரை, போரைதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவின் பாளையடிவட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை முகாம் சற்று முன்னர் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய அதிரடிப்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் திருகோணமலை முகாமுக்கு மாற்றம் பெற்று செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதத்திற்குள் அம்பிலாந்துறை, பொறுகாமம், போரதீவு, பழுகாமம், கொக்கட்டிச்சோலை, வெள்ளாவெளி, குருக்கல்மடம், செட்டிபாளையம், போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை முகாம்கள் அகற்றப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் பொதுமக்களின் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும், கொக்கட்டிச்சோலை, வெள்ளாவெளி ஆகிய முகாம்கள் இன்னமும் அகற்றப்படாத நிலையில் அங்கு படையினர் கடமைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
10 minute ago
14 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
14 minute ago
31 minute ago