Suganthini Ratnam / 2010 நவம்பர் 17 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ் வதனகுமார்)
கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை உபவேந்தராக நியமிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், தமிழர் ஒருவரை அப்பதவிக்கு நியமிக்குமாறு கோரி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவிற்கு கடிதமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உயர் கல்வி அமைச்சருக்கு அவர் அனுப்பிவைத்துள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிழக்கு பல்கலைக்கழகமானது பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழ்கின்ற பிராந்தியத்தை கொண்ட பல்கலைக்கழகமாகவும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை பேணிப் பாதுகாக்கவேண்டிய ஒரு பல்கலைக்கழகமாகவும் திகழ்கின்றது. இந்நிலையில் தற்போது பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை உபவேந்தராக நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது திட்டமிட்டு கிழக்கு பல்கலைக்கழகத்தை பாதிப்படையச் செய்யும் முயற்சியாகவும் தமிழர்களின் பாராம்பரிய பண்பாட்டு விழுமியங்களை பேணி பாதுகாக்காது நசுக்குவதற்கான முயற்சியாகவும் அமைகின்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு எதிர்காலத்தில் கல்வி சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக கலை, கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களையும் பல நூல்களையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டிய கடப்பாடும் உள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு மேலும் கல்விமான்களையும் கல்விச் சமூகத்தை உருவாக்குவதற்கும் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழ் உபவேந்தரின் பணி அத்தியவசியமானதென தெரிவித்துள்ள அவர், பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவரை நியமிப்பதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கையினை கைவிட்டு பொருத்தமான ஒரு தமிழரை உபவேந்தராக நியமிக்க வேண்டும்.
48 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
48 minute ago
1 hours ago