2025 ஜூலை 03, வியாழக்கிழமை

'கலை, கலாசாரம் நிலைப்பது பெண்களாலேயே சாத்தியம்'

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

தமது குழந்தைகளின் சந்தோசத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு தாய்மார் குழந்தைகளை கவனிக்கவேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு கல்லடி முன்பள்ளி படிப்பை முடித்துச்செல்லும் சீ.டி.எஸ்.முன்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில்; பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே,  அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,


எமது குழந்தைகள் சமுதாயத்தில் நல்லவர்களாவதும் கெட்டவர்களாவதும்; அன்னை வளர்ப்பிலேயே தங்கியுள்ளது.
எமது குழந்தைகளின் சந்தோசத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு  கவனமாக வளர்க்கவேண்டும். எமது சமூகம் கடந்த காலத்தில் பல்வேறு அழிவுகளை சந்தித்துள்ளதால்,  இனிவரும் காலத்தில்  சிறந்ததொரு சமுகத்தை கட்டியெழுப்பவேண்டிய கட்டாயத்திலுள்ளோம்.


எமது சமூகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வழிகளிலும் நாங்களும் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் கஷ்டப்படுகிறோம். மிக முக்கியமானது கல்வி. ஆகவே, எதிர்காலத்தில் வீட்டுக்கொரு பட்டதாரியை உருவாக்குவதற்கு நாங்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். அதேபோன்று பெற்றோர்களாகிய நீங்களும் உங்களது குழந்தையை அந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.


ஒரு சிறுவிதையில் பெரிய ஆலவிருட்சம் உருவாகுவதுபோல், நீங்கள் உங்கள் குழந்தையை நற்பிரஜையாக உருவாக்கும் செயற்பாட்டுக்கு எமது சமூகம் ஆலவிருட்சமாக மாறுவதற்கு ஏதுவாக இருக்கும். இன்னும் 50 ஆண்டுகளில் எமது சமூகத்தின் கலை, கலாசார பாரம்பரிய கட்டமைப்புகள் நிலைக்கவேண்டுமானால், தாய்மார்களால் மட்டுமே சாத்தியத்தை தரும் என்பதில்; சந்தேகம் இல்லை என்றார்.

இந்நிகழ்வில் இணையங்களின் தலைவர் வி.அமலதாஸ் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது, சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .