2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணி

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, ஜிப்ரான், வதனகுமார்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரித்தானியாவில் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்தும் ஜனதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியொன்று மட்டக்களப்பு நகரில் இன்று நடத்தப்பட்டது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு ஆதரவாளர்களினால் நடத்தப்பட்ட இப்பேரணி மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி மட்டக்களப்பு கச்சேரி வரை நடைபெற்றது. பேரணியில் சென்றோர் ஜனாதிபதிக்கு ஆதரவான சுலோகங்களை தாங்கிச் சென்றனர்.

பேரணியின் முடிவில் பிரித்தானிய தூதுவரிடத்தில் கையளிப்பதற்கான மகஜரொன்றை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடத்தில் கையளித்ததாக மீள் குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் ரவி தெரிவித்தார்.


  Comments - 0

 • sab Friday, 10 December 2010 05:46 PM

  இது மக்களால் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் அல்ல

  Reply : 0       0

  xlntgson Friday, 10 December 2010 08:44 PM

  சொற்பிரயோகம் பிழை, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரானதே ஆர்ப்பாட்டம் என்பது, தலைப்பில் ஆர்ப்பாட்டம் என்ற வார்த்தையை நீக்கினாலே போதுமானது!
  "ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் பேரணி!"

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--