2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி சிறுவர் அபிவிருத்திக்குழு அங்கத்தவர்களுக்கான பயிற்சிப்பட்டறை

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறுவர் அபிவிருத்திக்குழு அங்கத்தவர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை ஒன்று நேற்று புதிய காத்தான்குடி சமூக பராமரிப்பு நிலையத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் இடம்பெற்றது.

சிறுவர் பராமரிப்பு சேவைத்திணைக்களத்தின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்டமிடல்கள் அடிப்படையாகக் கொண்டு இந்த பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.

கிராம மட்டத்தில் இயங்குகின்ற கிராமிய சிறுவர் உரிமைகள் கண்கானிப்புக் குழுக்கள் மற்றும் சிறுவர்  வட்டம் என்பன சிறுவர்களின் பாதுகாப்பு திறன் விருத்தி மற்றும் அவர்களது பிரச்சினைகளைத் தடுப்பதற்கான செயற்பாடுகள் என்பவற்றை முன்னெடுத்து வருகின்றன.

இதனடிப்படையில் பிரதேச மட்டத்தில் இயங்குகின்ற இக்குழுவிற்கு நடைமுறையில் இருக்கின்ற சிறுவர் பாதுகாப்பு பொறிமுறை, பிள்ளைகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சம்பவம் முகாமைத்துவ முறைமை, எவ்வாறு தமது பங்களிப்புக்களை பிரதேசத்திற்கும், கிராம மட்டத்திற்கும் பெற்றுக் கொடுப்பது, எதிர்வரும் வருடம் மேற்கொள்ளப்பட இருக்கின்ற செயற்பாடுகள் என்பன போன்ற தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒருநாள் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் இணைப்பாளர் வி.குகதாசன், காத்தான்குடி பிரதேச சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் த.பிரபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--