2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

மட்டு. பஸ் நிலையத்திற்கு முன் சடலம் மீட்பு

Super User   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சிஹாறா லத்தீப்)

மட்டக்களப்பு புதிய பஸ் நிலைய கட்டிடத்திற்கு முன்பாக இன்று வெள்ளிகிழமை காலை இரத்த வாந்தி எடுத்த நிலையில் ஆணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட சடலம் பழுகாமம் 2 ஆம் பிரிவு, புதிய வன்னியார் நகரை வசிப்பிடமாக கொண்ட 42 வயதான பொன்னையா தம்பிரெட்ணம் என மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் அடையாளங்காணப்பட்டுள்ளது.

இவர் இருதய நோயாளி என அடையாளம் காணப்பட்ட வைத்திய அறிக்கைப் பத்திரம் இவரின் மேலங்கியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் நடத்திவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .