Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சிஹாறா லத்தீப்)
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் 'பாரபட்சத்திற்கெதிரான மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாத்தல்' என்ற தொனிப்பொருளில் விசேட நிகழ்வொன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு மனித உரிமைகள் இல்லத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு செல்வநாயகம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனித உரிமைகள், சட்ட உரிமைகள், மற்றும் ஏனைய உரிமைகள் பற்றி விளக்கவுரை நிகழ்த்தப்பட்டதுடன் மனித உரிமைகளை வலியுறுத்தி கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி வி.வினோபா இந்திரன் இந்நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் சட்ட உதவி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு இணைப்பாளர் இ.கந்தசாமி சட்டத்தரணி உட்பட பல்வேறு கிராமங்களையும் சேர்ந்த மனித உரிமைகள் குழுக்களின் பிரதிநிதிகள் இணைந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
1 hours ago
7 hours ago
9 hours ago
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
9 hours ago
28 Dec 2025