2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேங்காயின் விலை அதிகரிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு தேங்காயின் விலை தற்போது அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில் சிறிய தேங்காய் ஒன்று 35 ரூபாவுக்கும் பெரிய தேங்காய் ஒன்று  40 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

தற்போது சிறிய தேங்காய் ஒன்று 50 ரூபாவுக்கும் பெரிய தேங்காய் ஒன்று 60 ரூபா மற்றும் 65 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மட்டக்களப்பு பொதுச்சந்தை உட்பட மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலுமுள்ள பொதுச்சந்தைகளிலும் தேங்காய் தட்டுப்பாடில்லாமல் வருகை தருகின்ற போதிலும் தேங்காயின் விலை அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .