Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்,எம்.சுக்ரி)
30 வருடங்களின் பின்னர் மத்திய அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட முதலாவது கிழக்கு மாகாணத்திற்கான உலக சிறுவர்தின விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இவ்விழாவில், அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளார். பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர் .
மாகாண மட்டத்தில் 1200 சிறுவர்கள் இவ்விழாவில் பங்கேற்றுள்ளமை விசேட அம்சமாகும். பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை உடனே அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கமொன்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.
காத்தான்குடியில் உலக சிறுவர் தினத்தையொட்டி இன்று நடைபெற்ற கிழக்கு மாகாண மட்டத்திலான சிறுவர்தின விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் கூறினார்.
இங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சிறுவர்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் என்பவற்றை தடுப்பதற்காக எமது அமைச்சு தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் சிறுவர்களுக்கெதிராக இடம்பெறும் துஷ்பிரயோகச் சம்பங்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படுகின்ற நிலையில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதேபோன்று, பெண்களுக்கெதிராகவும் இடம்பெறும் வன்முறைகளை தெரிவிப்பதற்காக தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எமது அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த முப்பது வருட யுத்தத்தில் பரிதாபகரமாக சிறுவர்களும், பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று அந்நிலை மாறியுள்ளது. எமது அமைச்சினூடாக சிறுவர்களை அபிவிருத்தி செய்வதற்கும் சிறுவர்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகளை தடுப்பதற்காகவும் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இதேபோன்று பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவும் எமது அமைச்சு திட்டங்களை தீட்டியுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
38 minute ago
50 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
50 minute ago
57 minute ago