Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் சசிகுமார் தாக்கப்பட்டமைக்கு பல்வேறு அரசியல் தரப்பினரும் பொது அமைப்புக்களும் கண்டனங்களையும் கவலைகளையும் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், 'ஊடக சுதந்திரம் பாதுகாப்பாதுகாக்கப்பட வேண்டிய நேரத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மட்டக்களப்பு நகரில் தாக்கப்பட்மையானது கண்டனத்துக்கும் கவலைக்குமுரிய விடயமாகும்.
ஜெயந்திபுரத்தில் வைத்து ஊடகவியலாளர் சசிகுமார் தனது வீட்டில் குடும்பத்தாருடன் இருந்தவேளை தாக்கப்பட்டுள்ளார். நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்ற வேளையில் இவ்வாறு ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்மையானது கவலையளிக்கிறது.
பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கும் விடயத்தில் அனைத்து அரசியல், பொது அமைப்புக்ள், பொதுமக்கள் அனைவரும் செயற்பட வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் ஜனநாயகத்திற்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிப்பதாக அமையும்.
மக்களின் பொது விடயங்கள் சார்ந்து சிந்திக்கும் ஊடகவியலாளர்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்பதுடன் அவர்களுடைய கௌரவமும் மதிக்கப்பட வேண்டும்.
இத்தாக்குதல் தொடர்பில் பொலிஸார், மற்றும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதில் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago
19 Sep 2025