2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

அழகுக்கலை தொழில் பயிற்சி வகுப்பின் ஆரம்ப வைபவம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையின் ஆரையம்பதி தொழில் பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் அழகுக்கலை தொழில் பயிற்சி வகுப்பின் ஆரம்ப அறிமுக வைபவம் இன்று வெள்ளிக்கிழமை ஆரையம்பதி பிரதேசத்தில் நடைபெற்றது.


ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மகாணசபை உறுப்பினர் பிரசாந்தன், ஆரையம்பதி பிரதேசசபையின் தவிசாளர் கிறிஸ்ட்டினா, கோவில்குளம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி  கெப்டன் ராஜபக்ஷ, தொழில் பயிற்சி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் கையும், பயிற்சி உத்தியோகத்தர் நௌசாத் ஆகியோர் கலந்துகொண்டு இப்பயிற்சிநெறியினை ஆரம்பித்து வைத்தனர். இதில் அழகு கலை தொடர்பான அறிமுக காட்சிகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--