2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வெள்ளம் காரணமாக கொழும்பு - மட்டு. ரயில் சேவை இடைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 09 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  

நேற்று சனிக்கிழமை இரவு கொழும்பிலிருந்து புறப்பட்ட ரயில் ஏறாவூர் வரை சென்று அங்கிருந்து மட்டக்களப்புக்கு செல்லமுடியாததன் காரணமாக ஏறவூரில் தரித்து நிற்பதாக மட்டக்களப்பு ரயில் நிலைய அதிபர் எஸ்.துரைராஜா தெரிவித்தார்.  

இந்நிலையில், மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கான ரயில்சேவை இடம்பெறவில்லையெனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவைக்கான ரயில் பஸ் சேவையில் ஈடுபடவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.  

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக இடம்பெயரும் மக்களுக்கு பொது அமைப்புகளும் பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் உதவியளித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--