2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மட்டு. மாவட்ட பாடசாலைகளுக்கு ஒரு வாரகால விடுமுறை

Super User   / 2011 ஜனவரி 09 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம.சுக்ரி, ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் அடுத்த 5 நாட்களுக்கு மூடுவது என இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கபப்பட்டுள்ளது.

அத்துடன் சகல அரச திணைக்களங்களும் மக்களுக்கு தேவையான நிவாரண சேவைகளை துரிதமாக வழங்குவதுடன் கிராம அபிவிருத்தி சங்கங்களின் வங்கி கணக்கிலுள்ள பணங்களை எடுத்து மக்களுக்கான நிவாரண பணிகளுக்கு ஈடுபடுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அவசர நிலையினை பிரகடனப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, யோஸ்வரன், மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் மாகாண சபை உறுப்பினர்கள் மேலதிக அரசாங்க அதிபர் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

வெள்ளத்தினால் 112,039 குடும்பங்களை சேர்ந்த 421,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7,927 குடும்பங்களை சேர்ந்த 31,212 பேர் 97 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--