2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

வெள்ளத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார் அரியநேத்திரன் எம்.பி.

Super User   / 2011 ஜனவரி 09 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்துக்கு வெள்ள நிலைமைகளை பார்வையிட சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படவிருந்த வேளையில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இன்று காலை அவர் களுவாஞ்சிக்குடி பட்டிப்பளை, பழுகாமம் பகுதிகளுக்குச் சென்று வெள்ள நிலைமைகளை பார்வையிட்டார்.

அதன் பின்னர் பழுகாமம் வைத்தியசாலையில் இருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு  பிரசவத்திற்காக அழைத்துச்செல்லவிருந்த கர்ப்பிணிப் பெண்னையும் ஏற்றிக்கொண்டு பிக்கப் வாகனத்தில் பின்புறத்தில் நின்றவாறு அரியநேத்திரன் எம்.பி.  சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்தை வெள்ள நீர் இழுத்துச் செல்வதை உணர்ந்தாக அவர் தெரிவித்தார்.

'நாங்கள் செல்லும்போது குறைவான தண்ணீர் மட்டம் இருந்த பட்டிருப்பு பாலத்தில் நாங்கள், திரும்பிவரும்போது சுமார் ஆறு அடிக்கு தண்ணீர் ஓட்டம் இருந்தது.

இதன்போது தண்ணீருக்கூடாக வந்த அவ்வாகனம் ஆற்றை நோக்கி இழுத்துச்செல்லப்படுவதை அவதானிக்ககூடியதாகவிருந்தது.

எனினும் சாரதியின் சமயோசிதம் காரணமாக அவர் அந்த வாகனத்தை சிறப்பான முறையில் செலுத்தி எம்மைக்காப்பாற்றினார்' என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அதன்பின் அவர்  எருவில், ஓந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு, களுதாவளை, குருக்கள்மடம் ஆகிய பகுதிகளுக்கு சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .