2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மேலதிக சிகிச்சைக்கு நோயாளர்களை மாற்றுவதில் சிக்கல்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 10 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பில் வெள்ளம் காரணமாக கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கோ, பொலநறுவை வைத்தியசாலைக்கோ கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று வாழைச்சேனை வைத்திய சாலையில் இருந்து ஒரு பெண் மேலதிக சிகிச்சைக்காக ஹெலிக்கொப்ரர் மூலம் பொலநறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாவடிவேம்பு வைத்தியசாலை நீரில் மூழ்கியதன் காரணமாக அவ்வைத்தியசாலையின் சேவை செங்கலடி வைத்தியசாலையுடன் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X