2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வாவியில் வள்ளம் கவிழ்ந்தது: அதிரடிப்படையினரால் ஐவர் மீட்பு

Super User   / 2011 ஜனவரி 12 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

பட்டிருப்பு வாவியில் வள்ளத்தில் பயணித்த ஐவர், அவ்வள்ளம் கவிழ்ந்த நிலையில் விசேட அதிரடிப் படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாவியிலிருந்த முதலையைக் கண்டு வள்ளத்தை வேறு திசையில் திருப்பமுயன்றபோதே வள்ளம் கவிழ்ந்தாக தெரிவிக்கப்படுகிறது.

பழுகாமத்திலிருந்து பட்டிருப்பு வாவி ஊடாக பட்டிருப்பு நோக்கி வந்துகொண்டிருந்த வள்ளமே இவ்வாறு கவிழ்ந்தது. அதையடுத்து அதில் பயணம் செய்த ஐவரும் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினரால் காப்பாற்றப்பட்டனர். அவர்களில் ஒருவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .