2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவு மக்களை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் பார்வை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 13 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை  நேரில் சென்று பார்வையிட்ட மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கேற்ப நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மழை வெள்ளத்தால் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலத்துக்குட்பட்ட பகுதிகளில் 27 நலன்புரி நிலையங்களில் சுமார் 3150 குடும்பங்களை சேர்ந்த 11,100 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


அனைத்து பகுதிகளும்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து கிராமங்களிலும் நலன்புரி நிலையங்கள்  அமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.அருள்ராஜா தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி,  மகழூர், எருவில், குருமண்வெளி, ஒந்தாச்சிமடம், கல்லாறு, துறைநீலாவணை ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X