Super User / 2011 ஜனவரி 15 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று, கோரளைப்பற்று மத்தி மற்றும் கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார்.
மக்களின் தேவைகளைக் கேட்டரிந்ததுடன் சிறுவர்களுக்கான பால்மா, பாய் மற்றும் பெட்சீட் போன்ற பொருட்களையும் வழங்கிவைத்தார்.
பிரதியமைச்சருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.பி.எம். பரீட், பிரதி அமைச்சரின் கல்குடா இணைப்பாளர்களான என்.எம்.கஸ்ஸாலி, எம்.அஹமட் மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ரிபா வதூத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிலுள்ள மாவடிச்சேனை அல் ஹம்றா வித்தியாலயம், தியாவட்டுவான் அறபா வித்தியாலயம், மயிலம் கரைச்சை கலை மகள் வித்தியாலயம் ஆகிய மூன்று நலன்புரி முகாம்கள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மூடப்பட்டதாக கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தெரிவித்தார்.
.jpg)
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025