2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் காளான் பயிர்ச்செய்கை; முதற்தடவையாக நல்ல விளைச்சல்

Kogilavani   / 2011 ஜனவரி 24 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு,  காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட  காளான்  பயிர்ச் செய்கை முதற்தடவையாக நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது.

இதனை அறுவடை செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழைமை காத்தான்குடி விவசாய போதனாசிரியை முபிதா றமீசின் மேற்பார்வையில் நடைபெற்றது.

இதன்போது  50 பைக்கற்கள் காளான் பொதியிடப்பட்டதாக விவசாய போதனாசிரியை திருமதி முபிதா றமீஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காளான் செய்கையை ஊக்கப்படுத்தும்  பொருட்டு விவசாய திணைக்களம் காளான் செய்கையாளர்களுக்கு உதவி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--