Suganthini Ratnam / 2011 ஜனவரி 25 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
யாழ். மக்களினால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்காக வழங்கப்பட்ட ஒரு தொகை உதவிப் பொருட்கள் நேற்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டன.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா நுண்கலைக் கல்லூரியின் மாணவர்களுக்கே இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. 'ஓயாத கரங்கள்' என்ற கோஷத்துடன் யாழ். மக்களினால் சேகரிக்கப்பட்ட இந்த உதவிப் பொருட்கள் சுவாமி விபுலானந்தா நுண்கலைக் ;கல்லூரியின் யாழ.; பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் மூலமாக மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டன.
இந்தப் பொருட்கள் பல்கலைக்கழகத்தில் வைத்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.
சுவாமி விபுலானந்தா நுண்கலைக்கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தலைவர் தர்சன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்லூரியின் ஊழியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
.jpg)
55 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago