Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கோறளைப்பற்று (வாழைச்சேனை) கிராமிய தொழில் பயிற்சி நிலையத்திற்கு கணினிகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.
இன்று பிற்கபல் தொழில் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆர்.தாஹிர், போதனா ஆசிரியை டி.கஸ்தூரி மற்றும் தொழில் பயிற்சி நிலைய மாணவர்களும் முதலமைச்சரை வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் சந்தித்து பயிற்சி நிலையத்தின் தேவைகளை முன் வைத்தனர்.
பயிற்சி நிலையத்திற்கு தேவையாகவுள்ள கணினிகளை உடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததுடன்;, பயிற்சி நிலையத்திற்கு தேவையாகவுள்ள நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கு அதற்கான திட்ட வரைபுகளை தயார்ப்படுத்துமாறும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். இச்சந்திப்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் என்.திரவியமும் கலந்துகொண்டார்.
.jpg)
20 minute ago
24 minute ago
37 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
37 minute ago
52 minute ago