2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வெள்ளம் காரணமாக பழுகாமம் - திக்கோடை வீதி சேதம்

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

அண்மையில் பொய்த மழையினால்  மட்டக்களப்பு,  பழுகாமம் - திக்கோடை பிரதான வீதி முற்றாக சேதமடைந்துள்ளது.

திக்கோடை, தும்கங்கேணி, 40ஆம் கிராமம்,  தாந்தாமலை போன்ற பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டக்களப்பு, கல்முனை,  களுவாஞ்சிகுடி போன்ற நகர்ப் பகுதிகளுக்குச் செல்வதற்காகப்  இவ்வீதியை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இவ்வீதி முற்றாகச் சேதமடைந்துள்ளதனால் இப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பலத்த சிரமங்ளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வீதியினுடனான பஸ்போக்குவரத்தும்  தடைப்பட்டுள்ளதால் காந்திபுரம் எனும் கிராமத்தினூடாகவே பஸ்போக்குவரத்து நடைபெற்று வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X